இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தியுடன் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திருமணம்

ரோஷினி ஹரிப்ரியன்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரோஷினி ஹரிப்ரியன், இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தியை கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில், எளிமையாகவும் மனமகிழ்ச்சியாகவும் நடைபெற்றது.

திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சுந்தர மூர்த்தி, பொம்மை நாயகி, ஐரா, தண்டட்டி, டென் ஹவர்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பெயர் பெற்றவர்.

சீரியல் உலகில் இருந்து சினிமாவிலும் தனது பயணத்தை தொடரும் ரோஷினி ஹரிப்ரியன், கருடன், தலைவன் தலைவி, மெட்ராஸ் மேட்னி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்களது புதிய வாழ்க்கைக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

© 2026 Aha FM News | All rights reserved | Made With By Infox Cloud