விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தார். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பரிமாணங்களில் செயல்படும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் பூக்கி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அவரது அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கணேஷ் சந்திரா இயக்கிய இந்த படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 13ம் தேதி வெளியான நிலையில், பூக்கி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
இந்த சம்பவத்தை பற்றி விஜய் ஆண்டனி தனது எக்ஸ் (X) தளத்தில் கூறியிருப்பதாவது:
“வணக்கம், நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே, நான் ‘பூக்கி’ என்ற ஒரு நல்ல படத்தை புதிய டாலெண்ட்ஸுடன் தயாரித்து 2 நாள்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கேன். ‘பூக்கி’ ஒரு சூப்பர் படம். பார்த்தவங்க கட்டாயம் கேளுங்க, மிஸ் பண்ணாம பாருங்க. அப்புறம், ஒரு நல்ல படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணாதிங்க. நன்றி”
என அவர் ரசிகர்களுக்கு நேரடியாக பரிந்துரை வழங்கியுள்ளார்.





