‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் வென்ற சாரா அர்ஜுன், தற்போது பாலிவுட்டில் கதாநாயகியாகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளவயது நந்தினியாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்ற இவர், அண்மையில் இந்தியில் வெளியான ‘துரந்தர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக ஜொலித்தார். விரைவில் தென்னிந்தியத் திரையுலகிலும் அவர் நாயகியாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்துப் பேசியுள்ள சாரா அர்ஜுன், தனக்குத் ஒப்பனை (Makeup) செய்வதில் பெரிய அளவில் விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இயற்கையான அழகையே தான் விரும்புவதாகவும், பொது நிகழ்ச்சிகள் அல்லது படப்பிடிப்புகளின் போது கூட மிகக் குறைந்த அளவிலான டச்சப் (Touch-up) மட்டுமே செய்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அழகுப் சாதனப் பொருட்களைத் தவிர்த்து, இயல்பான தோற்றத்தை விரும்புவதாக அவர் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.




