100 ரூபாய்க்காக அனைவரின் முன்னும் டான்ஸ் ஆடிய யாஷிகா ஆனந்த்; அவரே சொன்ன தகவல்

யாஷிகா ஆனந்த்

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி, சிறிய விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி, கழுகு 2, பெஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்துப் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில், தனது சிறுபருவ கால அனுபவம் குறித்து யாஷிகா ஆனந்த் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். “எனக்கு பத்து வயது இருக்கும் போது, 100 ரூபாய் கிடைக்குமென்பதற்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் டான்ஸ் ஆடியிருக்கிறேன்.

என் நடனத்தை பார்த்து ரசித்து கை தட்டி, 100 ரூபாய் கொடுப்பார்கள். அந்த சிறிய தொகைக்காக அனைவரின் முன்னாலும் டான்ஸ் ஆடிய நிலையும் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறது,” என அவர் பகிர்ந்துள்ளார். இந்த அனுபவம் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

© 2026 Aha FM News | All rights reserved | Made With By Infox Cloud