தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் நிவேதா தாமஸ், அண்மைக் காலமாகத் தன் மீது முன்வைக்கப்படும் உருவக்கேலி மற்றும் எதிர்மறை விமர்சனங்களுக்குத் துணிச்சலுடன் பதிலளித்துள்ளார்.
‘பாபநாசம்’, ‘தர்பார்’ போன்ற படங்களில் முத்திரை பதித்த இவர், சில உடல்நலக் காரணங்களால் உடல் எடை அதிகரித்தபோது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இது தொடர்பாகத் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்த நிவேதா தாமஸ், ஆரம்பத்தில் இத்தகைய எதிர்மறை கருத்துகள் மனதிற்குச் சங்கடத்தைத் தந்தாலும், தற்போது அவற்றைப் புறந்தள்ளக் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், ஆனால் மனதைப் புண்படுத்தும் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ப்பதே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உருவக்கேலிகளுக்கு அஞ்சாமல் அவர் வெளியிட்டுள்ள இந்த முதிர்ச்சியான கருத்துக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.




