அழகுப் பராமரிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த சாரா அர்ஜுன், அதிகமான ஒப்பனை தனக்குப் பிடிப்பதில்லை எனக் கூறியுள்ளார். படப்பிடிப்பாக இருந்தாலும் பொதுநிகழ்ச்சியாக இருந்தாலும் சிறிய அளவிலான டச்சப் போதுமானது என்றும், இயல்பான தோற்றத்திலேயே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘தெய்வத்திருமகள்’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது நந்தினியாக நடித்தார். பின்னர் இந்தியில் வெளியான ‘துரந்தர்’ வழியாகக் கதாநாயகியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.
பாலிவுட்டில் நாயகியாக நடித்து வரும் அவரைத் தென்னிந்தியத் திரைப்படங்களிலும் அதே இடத்தில் காணலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், ஒப்பனையைவிட இயற்கையான அழகுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.







