பிஜோய் நம்பியார் இயக்கிய ‘து யா மெய்ன்’ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த மணிரத்னம், அதைத் திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய திரைப்படமாகக் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கொண்டுவந்துள்ள புதிய ஆற்றலும் திரை அனுபவமும் தன்னை ஈர்த்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஷனயா கபூர், ஆதர்ஷ் கவுரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த இந்தித் திரைப்படம் சர்வைவல் திரில்லர் வகையைச் சேர்ந்தது. தென்னிந்தியாவில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலில் மணிரத்னம் பங்கேற்றார்.

பதற்றத்தை உருவாக்கும் காட்சிகள், உணர்வுபூர்வமான பகுதிகள், கதை சொல்லப்படும் முறை ஆகியவற்றைப் பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர். மணிரத்னத்தின் கருத்து சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து திரைப்படம் மீதான கவனமும் அதிகரித்துள்ளது.