‘லெனின்’ திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக இணைந்துள்ளார். முதலில் நடித்துவந்த ஸ்ரீலீலா விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரதி என்ற கதாபாத்திரத்தில் பாக்யஸ்ரீ இடம்பெறுவதைத் தெரிவிக்கும் முதல் தோற்றப் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி நடிக்கும் படத்தை கிஷோர் அப்புரு இயக்குகிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் முதல் பாடல் 2026 ஜனவரி 5 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.







