நடிகை ரோஷினி ஹரிப்ரியனுக்கும் இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்ற எளிய நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன; புதுமணத் தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ தொடரால் அறிமுகமான ரோஷினி, ‘கருடன்’, ‘தலைவன் தலைவி’, ‘மெட்ராஸ் மேட்னி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சுந்தர மூர்த்தி ‘பொம்மை நாயகி’, ‘ஐரா’, ‘தண்டட்டி’, ‘டென் ஹவர்ஸ்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்.