பத்து வயதில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் முன்பு நடனமாடிய அனுபவத்தை யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ளார். நடனத்தை ரசித்தவர்கள் கைதட்டி ரூ.100 கொடுப்பார்கள் என்றும், அந்தப் பரிசைப் பெறுவதற்காக அப்போது அனைவரது முன்னிலையிலும் ஆடியிருப்பதாகவும் அவர் கூறினார்.
மாடலிங், சிறிய விளம்பரங்கள் ஆகியவற்றிலிருந்து சினிமாவுக்கு வந்த யாஷிகா, ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’, ‘கழுகு 2’, ‘பெஸ்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனது சிறுவயது நினைவை அவர் பகிர்ந்தது ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.







